கறம்பக்குடியில் இருந்து சரக்கு ஏற்றி வந்த லாரி, இன்று புதுப்பட்டி நெப்பியாக்குளம் பகுதி வளைவில் திரும்பும் போது ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் எதிர்பாராத விதமாக லாரி கவிழ்ந்தது. அப்போது சாலையில் சென்ற இளைஞர்கள் விபத்து குறித்து அறிந்ததும் உடனடியாக ஓட்டுநரை பத்திரமாக மீட்டனர். அவர்களது செயலுக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.