கோவை: சீமான் மீது காவல் நிலையத்தில் தவெகவினர் புகார் !
விஜயை அவமரியாதை செய்ததாக குற்றச்சாட்டு – சீமான் மீது நடவடிக்கை கோரி தவெகவினர் புகார்.;
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, தமிழக வெற்றிக்கழக (தவெக) உறுப்பினர்கள் நேற்று கோவையில் புகார் அளித்துள்ளனர். கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமையில் தவெகவினர் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், “கடந்த 14-ம் தேதி டவுன்ஹாலில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான், தவெக தலைவர் விஜயை மரியாதை குறைவாக பேசியுள்ளார். இது தொடர்ந்து நடந்தால், இரு கட்சியினரிடையே கலவரம் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரியுள்ளனர்.