ஆலங்குடி, வம்பன் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் 24, (செப்.17) புதுகைக்கு தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வம்பன் வேளாண் கல்லூரி அருகே செல்லும் பொழுது தூத்துக்குடியை சேர்ந்த ஊர்காவலன் 42, ஓட்டி வந்த பாரத் பெண்ட்ஸ் லாரி மோதியதில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.