திருநெல்வேலி மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பாளையங்கோட்டை வ.உ.சி மைதானம் அடுத்துள்ள முருகன்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லாமல் மக்கள் தினந்தோறும் அவதிப்படுகின்றனர். வயது முதிர்ந்தோர் மற்றும் பெண்கள் உட்கார இருக்கை இல்லாமலும் வெயிலில் நின்று கொண்டு, பேருந்துக்காக காத்திருக்கும் அவலநிலை ஏற்படுகிறது. எனவே இதனை மாநகராட்சி சரி செய்ய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.