திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நகரினை சுத்தமாக வைக்கும் விதமாக பத்தமடை பேரூராட்சி சார்பில் மாணவர்கள் மூலம் சிறப்பு விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இந்த பேரணியை செயல் அலுவலர் காதர் தொடங்கி வைத்தார்.இதில் மாணவர்கள் தூய்மை குறித்த கோஷங்கள் எழுப்பினர்.பேரணியில் துப்புரவு அலுவலர் தியாகராஜன் மற்றும் ஈஸ்ட் விஷன் டிரஸ்ட் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.