கோவை: சூலூரில் இளைஞர் தூக்குபோட்டு தற்கொலை !
குடும்ப தகராறில் உயிரிழந்த இளைஞர் – சூலூர் போலீஸ் வழக்கு பதிவு.;
கோவை மாவட்டம் சூலூர் அருகே சிங்காநல்லூரை சேர்ந்த மின்சார தொழிலாளி விக்னேஷ் (27), குடும்ப தகராறு காரணமாக நேற்று தனது தாத்தா வீட்டில் தூக்குபோட்டு உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி சௌத்ரி (21) சூலூர் போலீசில் புகார் அளித்ததின் பேரில், சூலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.