கோவையில் காட்டு யானை “ரோலக்ஸ்” மாயம் – இரவில் மயக்க ஊசி செலுத்திய வீடியோ அதிர்ச்சி !

மயக்க நிலையில் சுற்றி திரியும் காட்டு யானை.;

Update: 2025-09-19 05:47 GMT
கோவை, தொண்டாமுத்தூர் அருகே கிராமங்களில் அட்டகாசம் செய்த ரோலக்ஸ் என்ற காட்டு யானையை கட்டுப்படுத்த வனத்துறை முயற்சி செய்தது. இரவில் மயக்க ஊசி செலுத்தப்பட்டதால் யானை தப்பி வனப்பகுதிக்குள் ஓடியது. 50க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள், 3 கும்கி யானைகள் மற்றும் ட்ரோன் கேமரா மூலம் யானையை கண்காணித்தனர். யானைக்கு ஒரு ஊசி பாய்ந்ததாலும், அது மயக்க நிலையில் இருந்த போதிலும் ஓடி விட்டது. இந்த நிகழ்வு விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் வன உயிரின ஆர்வலர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. விதிமுறைக்கு மாறாக இரவில் ஊசி செலுத்திய வீடியோ வைரலாகி உள்ளது.

Similar News