ஆணவக் கொலை மிரட்டல் : உயிர் அஞ்சிய காதல் ஜோடி – கோவை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் !
சாதி வேறுபாட்டை மீறி திருமணம் செய்த ஜோடி – உயிர் அச்சத்தில் புகார்.;
பொள்ளாச்சி பழனியாண்டிபுதூரைச் சேர்ந்த பவிப்பிரியா (26), கொண்டே கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த சேதுபதி ஆகியோர் சாதி வேறுபாட்டை மீறி காதலித்து, பெற்றோரின் எதிர்ப்பை அடுத்தும் திருமணம் செய்து கொண்டனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பவிப்பிரியாவின் பெற்றோர், உயிருடன் இருக்க விடமாட்டோம் என மிரட்டியதோடு, குடும்பத்தினரும் உறவினர்களும் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளனர். சமீபத்தில், சேதுபதியின் தம்பியையும் தாக்கி மிரட்டியுள்ளனர். காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து, உயிருக்கு அஞ்சிய காதல் ஜோடி, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கோரி மனு அளித்துள்ளனர். தமிழகத்தில் மேலும் ஒரு ஆணவக் கொலை நடைபெறாமல் தடுக்க காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.