திருநெல்வேலி மாவட்டம் இராஜவல்லிபுரம் அடுத்த செப்பறை தாமிரசபை ஸ்ரீ அழகியகூத்தர் திருக்கோவிலில் புரட்டாசி மாத பிரதோஷ பூஜை நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோவிலில் அமைந்துள்ள நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் மற்றும் நந்தியம்பெருமான் சன்னதியில் சிறப்பு அபிஷேகமும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.