புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள பட்டுக்கோட்டை சாலையில் அதிகளவு பொதுமக்கள் சாலையின் இரு பறங்களிலும் இரு சக்கர வாகனங்களையும், கனரக வாகனங்களையும் நிறுத்துவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து காவலர்கள் பார்வையிட்டு இரு புறங்களில் உள்ள இருசக்கர வாகனங்களை அப்புறப்படுத்தி சரிசெய்ய பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.