கம்பம் பகுதியைச் சேர்ந்தவர் முகேந்திரகண்ணன். இவருக்கு கூடலூர் பகுதியில் வாழைத்தோட்டம் உள்ள நிலையில் நேற்று (செப்.19) காலை வழக்கம் போல் தோட்டத்திற்கு சென்று பார்த்த பொழுது அங்கு சுமார் 45 ஆயிரம் மதிப்பிலான 55 செவ்வாழை தார்கள் மர்ம நபர்களால் திருடப்பட்டது தெரிய வந்தது. இந்த திருட்டு சம்பவம் குறித்து கூடலூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.