போடியை சேர்ந்தவர் நாகநந்தினி (49). இவரிடம் அதே பகுதியை சேர்ந்த சுருளிமணி (50) என்பவர் ஜவுளி கடை கட்டித் தருவதாக கூறி ஓராண்டுக்கு முன்பு 30 பவுன் நகை வாங்கி கட்டடம் கட்டினார். கடை கட்டுவதற்கு பணம் போதவில்லை என கூறி மீண்டும் 30 பவுன் நகை மற்றும் 1லட்சம் பணம் வாங்கி உள்ளார். பணம் வாங்கியும் சுருளிமணி கடை கட்டி தராமல் இருந்துள்ளார். இது குறித்து போடி காவல்துறையினர் சுருளிமணி மீது வழக்கு (செப்.19) பதிவு.