திமுகவில் இணைந்த ஓபிஎஸ் அணி நிர்வாகி
மதுரையில் அமைச்சர் முன்னிலையில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த ஒன்றிய செயலாளர் திமுகவில் இணைந்தார்.;
மதுரை மாவட்டம் , ஓபிஎஸ் அணியின் அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான கல்லணை சேது சீனிவாசன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அக்கட்சியிலிருந்து விலகி தங்களை அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் இன்று (செப்.21) திமுகவில் இணைத்துக் கொண்டனர். உடன் வெங்கடேசன் எம்எல்ஏ மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் இருந்தனர்.