குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்

மதுரை கொட்டாம்பட்டி அருகே குடிநீர் வசதி கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;

Update: 2025-09-21 13:08 GMT
மதுரை மேலூர் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் கச்சிராயன்பட்டி ஊராட்சியில் குடி நீர் மின் மோட்டார் அடிக்கடி பழுதாவதால் குடிநீர் பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இதனால் குடிநீருக்காக மக்கள் பல கிலோமீட்டர் அலையும் நிலை உருவானது. இது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் இன்று (செப்.21) கச்சிராயன்பட்டி கிராம மக்கள் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து வந்து மதுரை நான்கு வழிச்சாலையில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர் .இதனால் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் சமாதானம் படுத்தினார்கள்.

Similar News