அறந்தாங்கி அருகே பெருமருதூர் பகுதியில் இருந்து வைக்கோல் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பெருமருதூர்-ஆவுடையார்கோவில் சாலையில் சென்ற பொழுது மேலே சென்று இருந்த மின்கம்பியில் எதிர்பாராதவிதமாக வைக்கோல் உரசியதில் வைகோல் தீப்பற்றி எரிய லாரியும் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்த ஆவுடையார்கோவில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.