புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையில் உள்ள தனியார் திருமண மஹாலில் தனியார் அறக்கட்டளை சார்பில், சிறுதானியத்தில் தயார் செய்த உணவுகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கேழ்வரகு, சோளம், கம்பு, பாசிப்பயறு, கொள்ளு உள்ளிட்ட சிறுதானியத்தில் தயார் செய்த சிற்றுண்டிகளை கண்காட்சிக்கு வைத்திருந்தனர்.