நெல்லை மாநகர பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவில் திருவிழாவிற்கு பாதுகாப்பு பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கு மூதாட்டி ஒருவர் சிரமப்பட்டு இருப்பதை அறிந்த தீயணைப்பு வீரர்கள் பாட்டி கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஒரு கம்பு மற்றும் துணிகளை வைத்துக்கொள்ள தோள்பை வாங்கி கொடுத்து உதவியுள்ளனர். இந்த சம்பவத்தை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.