தேனியை சேர்ந்தவர் செல்வம். சொத்து தகராறு காரணமாக இவரது மகன் முத்துராஜா, அவரது மனைவி ஹேமலதா இணைந்து சில நாட்களுக்கு முன் செல்வத்தை தாக்கினர். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து பணம் ரூ.22,500, ரூ.40,000 மதிப்பிலான பொருட்களை முத்துராஜா, ஹேமலதா எடுத்துச் சென்றனர். இது குறித்த புகாரில் தம்பதியர் மீது தேனி காவல்துறையினர் நேற்று (செப்.21) வழக்கு பதிவு.