தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட வெங்கலா கோயில் பகுதியில் இருந்து லேக் வியூ ரோடு செல்லும் சாக்கடை, பாரஸ்ட் ரோடு வழியாக ராஜவாய்க்கால் செல்லும் சாக்கடை, பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள சாக்கடைகள் மணல் துார்ந்து கழிவு நீர் செல்ல வழியின்றி காணப்படுகின்றன. இதனால் மழை பெய்தால் நகரின் குடியிருப்புப் பகுதிகளில் வசிப்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகுகின்றனர். சாக்கடைகளை தூர்வார உரிய நடவடிக்கை தேவை.