வாலிபர் கொலையில் மேலும் இருவர் கைது.

மதுரை மேலூர் அருகே வாலிபர் கொலை வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்;

Update: 2025-09-22 06:12 GMT
மதுரை மேலுார் அருகே கடந்த சில நாட்களுக்கு முன் புதுசுக்காம்பட்டி ராம்பிரசாத் சென்ற இரு சக்கர வாகனம் வினோபாகாலனி சந்தானம் சென்ற இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்ட தகராறில் சந்தானம் தரப்பை சேர்ந்தவர்கள் தாக்கியதில் ராம்பிரசாத் உயிரிழந்தார் .இவ் வழக்கில் ஏற்கனவே மூவர் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று (செப் .21) வினோபாகாலனியை சேர்ந்த பாண்டித்துரை 36, ராஜபாளையம் கோவிந்தராஜ் 35, இருவரை போலீசார் கைது செய்தனர்.

Similar News