பூங்காவை சீரமைக்க மனு அளித்த எஸ்டிபிஐ

நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ;

Update: 2025-09-22 08:39 GMT
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (செப்டம்பர் 22) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் பாளையங்கோட்டை தொகுதி செயலாளர் மின்னத்துல்லாஹ் மற்றும் தொகுதி துணை தலைவர் ஜவுளி காதர் ஆகியோர் கலந்து கொண்டு மனு அளித்தனர்.அதில் 45வது வார்டுக்கு உட்பட்ட மோத்தை மீரா பிள்ளை தெரு அருகில் உள்ள சிறுவர் பூங்காவை சீரமைத்து புதிய விளையாட்டு உபகரணங்கள் வழங்கி சிறு குழந்தைகள் பூங்காவாக மாற்றி தரும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.

Similar News