புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஒன்றியத்தில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு, மீட்பு பணி உபகரணங்களை தாசில்தார் வரதராஜன் நேற்று ஆய்வு செய்தார். மேலும் இந்நிகழ்வில் வரவிருக்கின்ற பருவமழையின் போது மீட்புப்பணியில் ஈடுபடும் பயிற்சி பெற்ற தன்னார்வலர்களுக்கு நிலைய அலுவலர் உபகரணங்களின் பயன்பாடு குறித்து விளக்கினார்.