நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் பர்கிட்மாநகர் கூட்டம் ஒன்றிய தலைவர் சிட்டி ஷேக் தலைமையில் பர்கிட்மாநகர கட்சி அலுவலகத்தில் வைத்து இன்று நடைபெற்றது. இதில் நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் பர்கிட் அலாவுதீன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் பர்கிட்மாநகரில் ஒரு லட்சம் கொள்ளளவு நீர்தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.