கூடலூர் வடக்கு காவல்துறையினர் குற்றத் தடுப்பு சம்பந்தமாக நேற்று (செப்.21) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கூடலூர் புதிய பேருந்து நிலையம் அருகே மகேந்திரன், அழகர், முருகன் ஆகியோர் சட்டவிரோதமாக பணம் வைத்து சீட்டு ஆடியது தெரிய வந்தது. அவர்களிடமிருந்த பணம் மற்றும் சீட்டு' கட்டுகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.