தேனி அல்லிநகரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (43), சென்ட்ரிங் காண்ட்ராக்டரான இவருக்கு கடந்த சில மாதங்களாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட கடன் பிரச்சினை காரணமாக மன வேதனையில் இருந்து வந்த சுரேஷ் நேற்று (செப்.21) அவரது குடோனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து அல்லிநகரம் காவல்துறையினர் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.