புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 183 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அப்பள்ளியில் அறக்கட்டளை சார்பில் சுமார் ரூ.1,20,000 மதிப்பில் கட்டப்பட்ட உணவு உண்ணும் கூடம் இன்று திறக்கப்பட்டது. இதில் அறக்கட்டளை நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.