புதுகை: சரக்கு வாகன மோதியதில் ஒருவர் பலி

விபத்து செய்திகள்;

Update: 2025-09-23 03:26 GMT
பொன்னமராவதி அருகே மூலகுடியைச் சேர்ந்தவர் குப்புசாமி. இவர் நேற்று மாலை கொப்பனாப்பட்டியில் சாலை ஓரத்தில் தனது நண்பர் சின்னையா என்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது தஞ்சாவூரில் இருந்து ஜன்னல் மற்றும் மரச்சாமான்களை ஏற்றிக்கொண்டு பூலாங்குறிச்சி நோக்கி வந்த டாடா ஏஸ் வாகனம் எதிர்பாராத விதமாக மோதலில் பலத்த காயமடைந்த குப்புசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரனை மேற்கொண்டுள்ளனர்.

Similar News