திருநெல்வேலி மாநகராட்சியில் இன்று (செப்டம்பர் 23) வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் ராஜு கலந்துகொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் மாநகராட்சிக்குட்பட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டி மனு அளித்தனர்.