திமுக சார்பில் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் - அமைச்சர் பங்கேற்பு
திமுக சார்பில் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் - அமைச்சர் பங்கேற்பு;
காஞ்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் - வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பங்கேற்பு! செங்கல்பட்டு மாவட்டம்,மாவட்டம் காஞ்சிபுரம், உத்திரமேரூர், மதுராந்தகம், செய்யூர் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிக்கான கழக நிர்வாகிகள் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் கருங்குழி தனியார் திருமண மண்டபத்தில் காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க. சுந்தர் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் எவ்வாறு பணியாற்றுவது குறித்தும், சட்டமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது குறித்தும், வெற்றி இலக்கை அடைய செய்ய வேண்டிய பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், தேர்தல் பொறுப்பாளர்கள் ராணி, எம்.டி.ஆர். சாரதி மணிமாறன் உள்ளிட்ட மாநகர, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.