செய்யூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: க. சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு

செய்யூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: க. சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு;

Update: 2025-09-24 05:06 GMT
செய்யூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: க. சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு! செங்கல்பட்டு மாவட்டம்,செய்யூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம் ஊராட்சி மன்ற தலைவர் லோகாம்பிகை ராஜமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளர்களாக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ., ஒன்றிய செயலாளர் எம். எஸ்.பாபு ஆகியோர் கலந்துகொண்டு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார். இந்த முகாமில் வருவாய்த்துறை, மின்சாரத்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட பதினைந்துக்கும் மேற்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் ஜெயலட்சுமி மகேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணவேணி தணிகாசலம் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News