முன்னாள் சபாநாயகர் நினைவிடத்தில் துணை முதல்வர் அஞ்சலி
மதுரை திருமங்கலம் அருகே உள்ள முன்னாள் சபாநாயகர் நினைவிடத்தில் துணை முதல்வர் அஞ்சலி செலுத்தினார்.;
மதுரை தெற்கு மாவட்டம், திருமங்கலம் - உசிலம்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்திற்கு இன்று (செப்.24) மாலை சென்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருமங்கலம் அருகேயுள்ள முத்தப்பன்பட்டிக்கு சென்று சேடபட்டி முத்தையா அவர்களின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதைச் செலுத்தினார். உடன் அமைச்சர்கள் மூர்த்தி, தங்கம் தென்னரசு, சேடப்பட்டி மணிமாறன் உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் இருந்தனர்.