தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் ரவுடி கைது
மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த ரவுடி தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்யப்பட்டார்.;
மதுரை அவனியாபுரம் செம்பூரணி ரோடு, பிரசன்னா காலனி என்ற முகவரியில் வசித்து வரும் முத்து என்பவருடைய மகனாகிய மாணிக்க விஜய் என்ற சீண்டி விஜய்( 23) என்பவர் காயம் ஏற்படுத்துதல் மற்றும் வழிப்பறி வழக்குகளில் கண்காணிப்பிற்கு வந்து, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகமான வகையில் செயல்பட்டு வந்துள்ளார். எனவே இவருடைய அத்தகைய சட்டவிரோதமான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, 25.09.2025 நேற்று மதுரை மாநகர், காவல் ஆணையர் லோகநாதன் அவர்கள் உத்தரவின்பேரில் மாணிக்கவிஜய் என்ற சீண்டி விஜய் மதுரை மத்திய சிறையில் 1982 ஆம் ஆண்டு தமிழ்நாடு தடுப்புக்காவல் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 14/1982)ன்கீழ் அடைக்கப்பட்டார்.