பிளஸ் ஒன் மாணவி மாயம். தந்தை புகார்

மதுரை உசிலம்பட்டி அருகே பிளஸ் ஒன் மாணவி மாயம் என புகார் அளிக்கப்பட்டுள்ளது;

Update: 2025-09-26 04:02 GMT
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கஸ்பா முதலைக்குளத்தில் வசிக்கும் ஆறுமுகம் என்பவரின் 16 வயது மகள் கோவிலாங்குளம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் ஒன் வகுப்பு படித்து வருகிறார். இவரது பெற்றோர்கள் நேற்று முன்தினம் (செப்.24) வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீட்டில் வந்து பார்த்த போது மகள் காணாமல் போயிருந்தது தெரிந்தது. உடனே அக்கம்பக்கத்தில் தேடி கிடைக்கவில்லை என்பதால் நேற்று( செப் .25) காலை விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் தந்தை புகார் அளித்தார் . போலீசார் வழக்கு பதிவு செய்து இளம் பெண்ணை தேடி வருகிறார்கள்.

Similar News