கிணற்றில் மூழ்கிய பள்ளி மாணவன் பலி
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கிணற்றில் மூழ்கிய பள்ளி மாணவன் பரிதாபமாக பலியானார்.;
மதுரை கிரைம் பிரான்ச் பகுதியை சேர்ந்த காதர் மைதீன் மகன் அபுதாகீர் (15 )என்பவர் மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் நிலையில் நண்பருடன் சேர்ந்து அலங்காநல்லூர் அருகே உள்ள கோட்டைமேடு பகுதியில் உள்ள 70 அடி விவசாய கிணற்றில் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அபுதாகீர் கிணற்றின் மூழ்கினார். இதுகுறித்து அலங்காநல்லூர் தீயணைப்புத்துறையினர் சுமார் 6 மணி நேரம் கிணற்றில் இறங்கி போராடி இறந்த மாணவரின் உடலை மீட்டனர். இது குறித்து அலங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.