காங்கிரசாரின் கையெழுத்து இயக்கம் தொடக்கம்
மதுரை உசிலம்பட்டியில் காங்கிரசார் கையெழுத்து இயக்கத்தை தொடங்கினார்கள்;
மதுரை உசிலம்பட்டியில் நேற்று (செப்.26) தேவர் சிலை முன்பு மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வாக்கு திருட்டு நடவடிக்கைகளுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் அம்மாபட்டி பாண்டி, உசிலம்பட்டி தொகுதி தலைவர் சரவணகுமார் உள்ளிட்ட பலர் ராகுல் காந்திக்கு ஆதரவாக கையெழுத்திட்டனர். உசிலம்பட்டி செல்லம்பட்டி சேடப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் பொதுமக்கள் இந்த கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.