கும்மியடித்து நூதன முறையில் போராட்டம்

மதுரை மேலூர் அருகே சிப்காட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து கும்மி அடித்து நூதன முறையில் கிராம மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.;

Update: 2025-09-27 13:51 GMT
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே வஞ்சி நகரம், கொடுக்கம்பட்டி, பூதமங்கலத்தில் 278 ஏக்கரில் சிப்காட் தொழிற்சாலை அமைக்க அரசு முடிவு செய்துள்ளதை எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் பல போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் நேற்று( செப் .26) கல்லங்காடு பகுதியில் உள்ள அழகு நாச்சியம்மன், சிவன் கோயில் பகுதிகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிப்காட்டை தடை செய்ய வலியுறுத்தி பொங்கல் வைத்து வழிபட்டு கும்மியடித்து நுாதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News