மதுரையில் புதிய அரசியல் கட்சி தொடக்கம்
மதுரையில் நேற்று புதிய அரசியல் கட்சி தொடக்க விழா நடைபெற்றது;
மதுரை திருப்பரங்குன்றம் அருகே தனியார் மண்டபத்தில் ஜெகன்நாத் மிஸ்ரா நமது மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியை நேற்று (செப்.26) மாலை ஆரம்பித்தார். அதிமுக.பாஜக ஆதரவு கட்சிகளான கொங்கு இளைஞர் பேரவை தனியரசு, தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவர் திருமாறன் ஆகியோர் புதிய கட்சி துவக்க விழாவில் கலந்து கொண்டனர். செய்தியாளர்களிடம் பேசிய ஜெகன்நாத் மிஸ்ரா எங்களுடைய கொள்கையுடன் ஒத்து இருந்தால் விஜயுடன் கூட்டணி அமைப்போம் என்றார்.