எடப்பாடி பேச்சுக்கு ராஜேஷ் குமார் எம். எல். ஏ. கண்டனம்

கன்னியாகுமரி;

Update: 2025-09-27 14:32 GMT
.தமிழ்நாடுசட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் செ.ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அதிமுக பொதுச்செயலாளர் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.வை தரம் தாழ்ந்து அரசியல் நாகரீகம் இல்லாமல் பிச்சைக்காரன் என்று இழிவுபடுத்தி வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசியதை தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் என்ற முறையில் வன்மையாக கண்டிக்கிறேன். ஒரு தேசிய கட்சியின் தலைவரை பற்றி பேசுவதற்கு முன் எடப்பாடி பழனிச்சாமி எப்படி பதவிக்கும் ஆட்சிக்கும் வந்தோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். விசுவாசத்தை பற்றி பேசுவதற்கு எடப்பாடிக்கு எந்த ஒரு அருகதையும் இல்லை. பதவிக்கு வந்த பின்பு, பதவி கொடுத்தவரை கட்சியை விட்டு நீக்கிய எடப்பாடி எல்லாம் விசுவாசத்தை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது. அமித்ஷாவின் அடிமையாக பாஜகவின் கட்டுப்பாட்டில் யார் எந்த கட்சி இருக்கிறது என்று தமிழ்நாடு மக்கள் அனைவரும் நன்கு அறிவர் . எந்த காலத்திலும் காங்கிரஸ் பேரியக்கம் யாருக்கும் அடிபணிந்ததும் இல்லை, யாரின் காலையும் பிடித்து வாழ வேண்டிய அவசியம் இல்லை. எடப்பாடி பழனிச்சாமி வால் அருந்த நரியாக ஊளையிடாமல் இனியாவது நாவடக்கத்தோடு பேச கற்றுக் கொள்ள வேண்டுமென எச்சரிக்கிறேன். இவ்வாறு தமிழ்நாடுராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Similar News