குடிநீர் டேங்கில் கேரளாவுக்கு மண்ணெண்ணெய் கடத்தல்

நித்திரவிளை;

Update: 2025-09-27 14:53 GMT
குமரியில் மீனவர்களுக்கு அரசு மானிய விலையில் படகுகளுக்கு வழங்கும் மண்ணெண்ணைய் வாகனங்கள் மூலம் கேரளாவுக்கு கடத்தப்படுவது வழக்கம். இன்று 27-ம் தேதி காலை நித்திரவிளை அருகே விரி விளை சந்திப்பில் போலீசார் நடத்திய வாகன சோதனையின் போது, 2 குடிநீர் டேங்குகளுடன் வாகனம் ஒன்று ஒரு டீ கடை முன்பு நின்றது. அப்போது அருகே நின்று கொண்டிருந்த போலீசார் வாகனத்தில் இருந்து மண்ணெண்ணெய் வாடை வீசுவதை கண்டு டிரைவரிடம் இது குறித்து விசாரித்துள்ளனர். அப்போது மினி டெம்போ டிரைவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், சந்தேகமடைந்த போலீசார் மினி டெம்போ வில் ஏறி தண்ணீர் தொட்டியில் பார்த்த போது, உள்ளே மண்ணெண்ணெய் கேன்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். இதை அடுத்து போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்ததுடன் டிரைவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அவரிடத்தில் விசாரித்தனர். அப்போது அவர் வழக்கன்பாறை பகுதியைச் சேர்ந்த சுப்பையா (23) என்பது தெரிய வந்தது.

Similar News