கன்னியாகுமரி மாவட்டம், ரீத்தாபுரம் கடம்பறவிளையைச் சேர்ந்த ஏ.சி. மெக்கானிக் போஸ் அலெக்ஸ் (வயது 54), இவரது வீட்டில் உள்ள இன்வெர்டரை பழுது பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கே அவரை பரிசோதித்த டாக்டர், போஸ் அலெக்ஸ் ஏற்கெனவே இறந்ததாக கூறினார். மனைவி, குழந்தைகள் கண் எதிரே மின்சாரம் தாக்கி ஏ.சி. மெக்கானிக் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து குளச்சல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.