தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குளம் தூர்வாரும் பணி

சுசீந்திரம்;

Update: 2025-09-28 06:36 GMT
குமரி மாவட்டம் சுசீந்திரம் தாணு மாலைய சுவாமி கோவில் தெப்பக்குளம் தூர்வார பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் கோவில் தெப்பக்குளத்தை தூர் வருவதற்கு 45 லட்ச ரூபாயும், பாத்திரக்குளத்தை தூர் வாருவதற்கு 15 லட்ச ரூபாயும் அரசு ஒதுக்கீடு செய்து அதற்கான பணி நடைபெற்று வருகிறது. இதில் தெப்பக்குளத்தில் நீர் நிறைந்த பின்பு அங்கிருந்து வெளியேறும் நீரானது மணக்குடியான் கால்வாயில் செல்வதற்கான கல்லால் அக்கால அரசர்களால் கட்டப்பட்ட கால்வாய் தென்பட்டது. தற்போது அந்த கால்வாயை தூர்வாரும் பணியும் நடைபெற்று வருகிறது. அதுபோல பழைய ஆற்றில் இருந்து தண்ணீர் வருவதற்கான கால்வாயும் தூர்வாரி தெப்பக்குளம் தூர்வாரும் பணி முடிந்த பின்பு தண்ணீர் நிரப்ப வேண்டும் என மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Similar News