அரசு மருத்துவமனையில் தமுமுக சார்பில் நோயாளிகளுக்கு பிரட், பழங்கள்.
ஆரணி அரசு மருத்துவமனையில் தமுமுக 31 ஆம் ஆண்டு விழா முன்னிட்டு நோயாளிகளுக்கு பிரட், பழங்கள் வழங்கப்பட்டது.;
ஆரணி அரசு மருத்துவமனையில்தமுமுக-வின் 31-ம் ஆண்டு துவக்க விழா-வை முன்னிட்டு நோயாலிகளுக்கு பிரட், பழங்கள் வழங்கப்பட்டது. மேலும் ஆரணி முதியோர் போதிமரம் டிரஸ்டில் வசிக்கும் 40 க்கும் மேற்ப்பட்டவர்களுக்கு இரவு சிற்றுண்டி மற்றும் இனிப்புகள் வழங்கபட்டது. இதில் தலைமை கழக பேச்சாளர் கோவை சையது, தலைமைப் பிரதிநிதி அச்சரப்பாக்கம் ஷாஜகான் ஆகியோர் நோயாளிகளுக்கு பிரட், பழங்களை வழங்கினார். இதில் நகரத் தலைவர் ஜீலான் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் ஜமால், மமக மாவட்டச் செயலாளர் ஏ.நசீர்அகமத், தமுமுக மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், மாவட்ட பொருளாளர் யூனுஸ் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தி.மலை வடக்கு மாவட்ட கேபினேட் நிர்வாகிகள்,மண்டல துணை,அணி நகர,ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.