மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் அம்பலப்படுத்திய, இந்திய தேர்தல் ஆணையமும், ஒன்றிய பா.ஜ.க. அரசும் இணைந்து நடத்திய வாக்குத் திருட்டை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் ஓபிசி பிரிவு சார்பில் பிரிவின் மாவட்ட தலைவர் சிஜின் ஆல்பர்ட் தலைமையில் கருங்கலில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செ. ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பினுலால் சிங், மற்றும் நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் மற்றும் பொது மக்கள் உட்பட ஏராளமானோர்