மின்னணு நலவாரிய அட்டை - கலெக்டர் வழங்கினார்

மலைவாழ் மக்களுக்கு;

Update: 2025-09-28 13:00 GMT
குமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் கடையால் பேரூராட்சிக்குட்பட்ட  முத்தன்கரை மலைப்பகுதியில் மலைவாழ் பழங்குடியின மக்களை கலெக்டர் அழகுமீனா, நேரில் சந்தித்தார்.  தொடர்ந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மின்னணு பழங்குடியினர் நல வாரிய அட்டைகள்  27 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. மேலும் ,  வனவுரிமைச் சட்டத்தின் கீழ் தனி உரிமை பட்டா வழங்குவது தொடர்பாக பழங்குடியின மக்களால் அளிக்கப்பட்ட முறையீடுகளை ஆய்வு செய்து அவர்களுக்கு பட்டா வழங்க உரிய  நடவடிக்கைகள் மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

Similar News