போக்சோ வழக்கில் சிக்கியவர் குண்டர் சட்டத்தில் கைது

புதுக்கடை;

Update: 2025-09-28 13:02 GMT
குமரி மாவட்டம் புதுக்கடை பகுதியை சேர்ந்தவர் ஷைஜு (30). இவர் போக்சோவில் கைதாகி நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய, எஸ்பி ஸ்டாலின் கலெக்டர் அழகு மீனாவுக்கு பரிந்துரைத்தார். இதை ஏற்று  குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார். மார்த்தாண்டம் மகளிர் போலீசார் ஷைஜுவை  குண்டர் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் இன்று அடைத்தனர்.

Similar News