சொத்து தகராறு மூதாட்டியை கொலை செய்த வாலிபர் கைது
காரிமங்கலம் அருகே சொத்து தகராறில் மூதாட்டியை கொலை செய்த வாலிபர் கைது செய்து சிறையில் அடைப்பு;
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம் அருகே பல்லேனஅள்ளியில், சொத்துத் தகராறு காரணமாக மாதம்மாள் என்ற மூதாட்டியை, அவரது உறவினர் அருண்குமார் மது போதையில் கடப்பாரையால் தாக்கி நேற்று கொலை செய்துவிட்டு தலைமறைவானார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காரிமங்கலம் காவலர்கள், அவரது வீட்டின் அருகே பதுங்கி இருந்த அருண்குமார் இன்று திங்கட்கிழமை காலை பிடித்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்