கோவை: சுற்றுலா வந்தவர்களின் வேனை நொறுக்கிய காட்டு யானைகள் !
மளுக்கப்பாறை சாலையில் சுற்றுலா பயணிகள் வேனை யானை நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.;
வால்பாறை–சாலக்குடி மளுக்கப்பாறை வழியாக அதிரப்பள்ளி அருவிக்கு சுற்றுலா வந்த கேரளத்தின் பட்டாம்பி பகுதியைச் சேர்ந்த பயணிகள், வாகனத்தில் கோளாறு ஏற்பட்டதால் ஆனைக்காயம் பகுதியில் வேனை சாலையோரம் நிறுத்தி ரிசார்ட்டில் தங்கினர். நேற்று மீண்டும் வந்தபோது, காட்டு யானைகள் வேனை அடித்து நொறுக்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த அதிரப்பள்ளி வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினர்.