பொள்ளாச்சி – வரகளியார் முகாமில் வளர்ப்பு யானை உயிரிழப்பு !
சிகிச்சை பலனின்றி 38 வயது யானை வெங்கடேஷ் மரணம்.;
பொள்ளாச்சி அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வரகளியார் முகாமில் பராமரிக்கப்பட்ட 38 வயது வளர்ப்பு ஆண் யானை ‘வெங்கடேஷ்’ உடல் நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. துணை இயக்குனர் தேவேந்திரகுமார் மீனா தலைமையில் வன அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் வெனிலா, ஜெயரவீனா, கவுதம் ஆகியோர் தொடர்ந்து சிகிச்சை அளித்தும் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. பிரேத பரிசோதனைக்குப் பிறகு மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.