கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  

நாகர்கோவில்;

Update: 2025-09-29 10:37 GMT
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் கலெக்டர் அழகுமீனா, தலைமையில்,  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று திங்கள்கிழமை நடைபெற்றது.    நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி, கலைஞர் மகளிர் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 304 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.  பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். நடைபெற்ற கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் சேக் அப்துல் காதர், துறை அலுவலர்கள்,   பொதுமக்கள்  உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Similar News