குற்றாலத்தில் குவியும் சுற்றுலா பயணிகள்
குற்றாலத்தில் குவியும் சுற்றுலா பயணிகள்;
தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள குற்றாலம் மற்றும் ஐந்தருவி பகுதிகளில் தொடர்ந்து பெய்யும் கனமழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பள்ளி விடுமுறை மற்றும் தொடர் விடுமுறையாக இருப்பதால் குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. இன்று காலை முதல் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்ட போதும் பயணிகள் கனமழையிலும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளியல் போட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.